ஆதியோகியும் சத்குருவும்

சிவனுக்கு மட்டுமேன் 

இத்தனைக் கூட்டம்?

என்ன வேண்டுமானுலும் 

செய்வேன் என?

எது கேட்டாலும் 

தருவேன் என?

பெற்றதை வெட்டி

சமைக்கத் துணிந்தவரும்

கட்டியதைக் கூட்டிக்கொடுத்து

வழிக்காவலாய்ச் சென்றவரும்

மணக்கோலத்து மகள்

தலையை மழித்து 

முப்புரிநூல் கொடுத்தவரும்

பெற்றவன் காலை

வெட்டியவரும், அய்யோ!

வேண்டாமய்யா உம்சங்காத்தம்!

என்றிருக்க, ஏழடிக்கு 

சிலைசெய்து தேரேற்றித் 

தெருவோடு அனுப்பினீர்,

இன்றுஎன் புனைப்பெயர்

ஷிவார்ப்பணா . 

சாதித்துவிட்டீரய்யா சத்குருவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாலகுமாரனா சுஜாதாவா?

   லெஜண்ட் என்பதற்கு தமிழில் சமமான வார்த்தை தெரிந்தால் கூறுங்கள். தமிழில் லெஜண்டரி ரைட்டர் என்றால் அது பாலகுமாரன் தான். அவருடனான பரிச்சயம் எ...