ஆச்சார்ய தேவோ பவ!

1998 - ஃபிஃப்த் ஜெனரேஷன் சிஸ்டம்ஸ்

  ஃபேகல்ட்டி ரூமில் அழுது கொண்டிருந்தேன். அழுகைக்கு காரணம் ஒரு மாணவன்.

கோர்ஸ் முடித்து செல்லும் கடைசி நாள், “ ஒரு நல்ல டீச்சர் எப்டி இருக்கணும்னு

காமிச்சிட்டீங்க மேம்!” என்றான்.

  ஆரம்பத்தில் அராத்தாக இருந்து படுத்திக் கொண்டிருந்தவன். சொல்லிவைத்தார் போல்

தினமும் லேட்டாக வருவதும் வகுப்பில் இருக்கும் மாணவிகளை ட்டீஸ் செய்வதுமாக

இருந்தவன். ஒரு முறை வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது வகுப்பறையில்

இருந்த பழைய மாடல் மர ஃப்ரேம் போட்ட பெரிய ஏ.சி. மெஷின், சர்வீசுக்காக

ஃப்ரேம் கழற்றி வைக்கப் பட்டிருந்தது. இவன் வகுப்பைக் கவனிக்காமல் அதில்

கைவிட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். நான் “ என்ன இஞ்சினியர் சார்?

என்ன செஞ்சிட்டிருக்கீங்க?” என்று கேட்டேன். அவன் கூறிய பதில் கொஞ்சம்

பேசத் தரமில்லாத மாதிரி இருந்தது. மாணவிகள் நெளிந்தனர். நான் பட்டென்று 

“ உங்கள் பதில் அத்தனை நாகரிகமாக இல்லையே?” என்றேன். அவன் முகம்

சிவந்து போனது. எனக்கு பரிதாபமாக போய்விட்டது. ஏதோ வயது கோளாறு,

பேசிவிட்டான். பலர் முன்னிலையில் சுட்டிக் காட்டியதும் அவமானமாக இருந்திருக்கும்.

அவனை சகஜமாக்க முன்னால் வரவழைத்து போர்டில் போர்டில் ப்ரொக்ராம் போட

வைத்தேன். கை நடுங்க, தடுமாறிக் கொண்டே எழுதினான். நான் எதுவுமே

நடகாதது போல் மிகச் சாதாரணமாக எப்போதும் போல் மரியாதையோடு அவனை

நடத்தினேன். அது அவனைத் தொட்டது போலும்.

அதற்கு பின் அவன் ஒரு முறை கூட வகுப்பிற்குத் தாமதமாக வரவில்லை. கொடுத்த

எக்சர்சைஸ்களை சரியாக முடித்து வகுப்பிலும் மிக ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்தான். கடைசி நாள் இப்படி பேசி என்னை அழவும் வைத்தான் “ ஒரு நல்ல டீச்சர் எப்டி இருக்கணும்னு காண்பிச்சுட்டீங்க!” என்றவனிடம் “எனக்கு அமஞ்ச மாதிரி அருமையான டீச்சர்ஸ் உங்களுக்கு இன்னும் அமையலன்னு நினைக்கறேன். அதான் இப்டி பேசறீங்க. ” என்றேன்.

வாழ்க்கையில் எத்தனையோ முட்டாள்தனங்கள் செய்திருந்தாலும், நான் ஆசிரியராகப் பணியாற்றியது மிகக் குறைந்த காலமே என்றாலும் அன்று வகுப்பறையில் எப்போது கண்டிக்கவேண்டும் எப்போது அரவணைத்து போக வேண்டும் என்பது புரிந்து நடக்கும் தன்மை அன்று எனக்கு ஏற்படக் காரணம் எனக்கு கிடைத்த முன்னுதாரணங்கள் - அற்புதமான என் ஆசிரியர்கள்.

அவர்களைக் கொண்டாடும் விதமாக அவர்களுடனான என் அனுபவங்களை இந்த மின்னூலில் பகிர்கிறேன்.

ஆச்சார்ய தேவோ பவ!

லின்க் :  https://freetamilebooks.com/ebooks/aacharya_devo_bava/

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பரிமாறவும்.

B ஷிவார்ப்பணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாலகுமாரனா சுஜாதாவா?

   லெஜண்ட் என்பதற்கு தமிழில் சமமான வார்த்தை தெரிந்தால் கூறுங்கள். தமிழில் லெஜண்டரி ரைட்டர் என்றால் அது பாலகுமாரன் தான். அவருடனான பரிச்சயம் எ...